தெரு குழந்தைகளுக்கு பாதுகாப்பு : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

தெரு குழந்தைகளுக்கு பாதுகாப்பு : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜன.29   நாடு முழுவதும் கரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதையடுத்து கரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் தங்குவதற்கு உறைவிடமின்றி தெருச் சூழலில் வசிக்கும் குழந்தைகளின் அவலநிலை குறித்து  தானாக முன்வந்து பதிந்த வழக்கானது தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் 27.1.2022) அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்குவதற்கு இடமில்லாமல் தெருச் சூழலில் வசிக்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். 

மேலும் அதுசார்ந்த நடைமுறைகளை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக முடிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை  ஒத்திவைத்தார்.


No comments:

Post a Comment