மத சுதந்திரம், பன்முகத் தன்மை, சகிப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்
குடியரசு மேனாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
புதுடில்லி,ஜன.29- இந்திய - அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் சார்பில் 26.1.2022 அன்று காணொலி வழி குழு விவாதக் கூட்டம் நடைபெற்றது.
குடியரசு மேனாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப் பினர்கள் உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், இந்தியா வில் தற்போதைய மனித உரி மைகள் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். வகுப்புவாத வன்முறை, மசூதிகள் சூறையா டப்படுவதும், கிறிஸ்தவ ஆலயங்கள் தீ வைத்து எரிக்கப்படு வதும் அண்மைக்காலமாக அதி கரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்தியக் குடியரசு மேனாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி காணொலிக்கூட்டத்தில் உரையாற்றுகையில், நாட்டில் அதிகரித்து வரும் ‘ஹிந்து தேசிய வாதம்’ என்ற போக்கு குறித்து கவலை தெரிவித்தார். ‘குடிமக் களை அவர்களின் அடிப்படை நம்பிக்கையின் அடிப்படையில் வேறுபடுத்தியும், சகிப்புத் தன் மையின்மை மற்றும் பாதுகாப் பில்லாத நிலையை ஏற்படுத்தியும் நடைபெறும் சம்பவங்கள் நாட் டில் அண்மைக்காலமாக அதி கரித்து வருகின்றன.
அதாவது, பல ஆண்டுகளாக கடைப்பிடிக் கப்பட்டு வரும் பொது தேசிய வாத தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில், புதிய கற்பனையான கலாச்சார தேசியவாத நடைமுறைகள் நாட்டில் அதிகரித்து வருகின் றன’ என்று வேதனை தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற மேலவை செனட் உறுப்பினர்
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் உறுப்பி னரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவருமான எட் மார்க்கி பேசும்போது, ‘சிறுபான்மையினரின் நம்பிக்கை அடிப்படையிலான நடைமுறைகளை இந் திய அரசு தொடர்ந்து இலக் காக்கி வருவது, பாகுபாடு மற் றும் வன்முறை கலாசாரம் வேரூன்றும் சூழலை உருவாக்கி விடும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இணையவழி வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதோடு, வகுப்புவாத வன்முறை, மசூதிகள் சூறையா டப்படுதல், கிறிஸ்தவ ஆல யங்கள் தீவைத்து எரித்தல் போன்ற அசம்பாவிதங்கள் அதி கரித்து வருவதைக் காண முடிகிறது’ என்றார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்தக் குழு விவாதத்தில் பங்கேற்ற அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஜிம் மெக்கவர்ன், ஆண்டி லெவின், ஜேமி ரஸ்கின் ஆகியோரும் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
ரஸ்கின் கூறுகையில், ‘இந்தி யாவில் மத சுதந்திர விவகாரத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள் ளன. பாகுபாடு காட்டப்படு கிறது. எனவே, மத சுதந்திரம், பன்முகத் தன்மை, சகிப்புத் தன்மை பாதையில் இந்தியா செல்வதை உறுதிப்படுத்த வேண் டும் என்பதே நமது விருப்பம்’ என்றார்.
லெவின் பேசும்போது, ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வருந்தத்தக்க வகையில், இன்றைக்கு மனித உரிமைகள் மீதான தாக்குதல், மத தேசிய வாதம் போன்ற நடவடிக்கை களால் பின்னோக்கி சரிந்து வரு கிறது. உலக ஜனநாயக குறியீட் டில் கடந்த 2014-ஆம் ஆண்டி லிருந்து இந்தியா 27-ஆவது தரவரிசையிலிருந்து 53-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள் ளது. அதுபோல ‘ஃபிரீடம் ஹவுஸ்’ அமைப்பு இந்தியாவை சுதந்திரமான நாடு என்ற நிலையிலிருந்து ‘பகுதி சுதந்திரம்’ நிலைக்கு தர நிலையை குறைத் துள்ளது’ என்றார்.
இந்தியாவில் மனித உரி மைகள் மீறப்பட்டு வருவதற்கான பல்வேறு உதாரணங்களை ஜிம் மெக்கவர்ன் எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
No comments:
Post a Comment