டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
சுதந்திர போராட்டத்தின்போது ஹிந்து மதம், ஜாதிய புனிதம், பிறரை வெளியேற்றுதல் இவற்றில்தான் ஆர். எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர் கவனம் செலுத்தினார் என ஆய்வாளர் மோகன் குருசாமி கருத்து.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
இந்தியா முழுமைக்கும் சமூக நீதிக்கான இயக்கம் கட்டமைக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உறுதி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
பீகார் மற்றும் உ.பி. மாநிலங்களில் தேர்வர்களின் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே தேர்வு வாரியத்தின் நிலை-1 தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.
தி இந்து:
பொது சுகாதாரத்தின் திராவிட மாடலை - சுகாதாரத் துறையில் தமிழ்நாடு கடைப்பிடிக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தியா முழுவதும் சமூக முன்னேற்றத்தை எளிதாக்கலாம் என கட்டுரையாளர்கள் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு நாளை முன்னிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அமர்ந் திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment