சட்டமன்றத்தில் இன்று இரங்கல் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

சட்டமன்றத்தில் இன்று இரங்கல் தீர்மானம்

சென்னை,ஜன.6- சட்டமன்றத்தில் இன்று (6.1.2022) தமிழ்நாடு மேனாள் ஆளுநர் டாக்டர் கோ.ரோசய்யா, முப்படைத் தளபதி பிபின் ராவத், மூத்த விவசாயிகள் சங்கத் தலைவர் வே.துரைமாணிக்கம், மனித உரிமை செயற்ட்டாளர் எட்மண்ட் டுட்டு மற்றும் மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப் பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டம் நேற்று (5.1.2022) ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (6.1.2022) இரண்டாம் நாள் சட்டமன்ற பேரவைக் கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மறைவுற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்தார்.

அத்தீர்மானம் வருமாறு: சட்டமன்ற பேரவை மேனாள் உறுப்பினர்கள் ஜீனத் ஷெத்புதீன், .இராஜேந்திரன், தி..மாயவன், கரு.முருகானந்தம், வெ.கோவிந்தன்,ஜெ.லோகம்மாள், என்.நன்மாறன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, வே.கண்ணன், பெரி.சண்முகம், எஸ். அண்ணாமலை, டாக்டர் எம்.மோசஸ் ஆகிய சட்டமன்ற மேனாள் உறுப் பினர்கள் மறைந்த செய்தியை அறிந்து இந்த பேரவை வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாடு மேனாள் ஆளுநர் டாக்டர் கோ.ரோசய்யா, இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, குரூப் கேப்டன் வருண்சிங் மற்றும் 11 இராணுவ உயர் அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்தும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.துரைமாணிக்கம் மறைவு குறித்தும், பிரபல கன்னட திரைப்பட கலைஞர் புனித் ராஜ்குமார் மறைவுகுறித்தும், மனித உரிமை செயற் பாட்டாளர் பேராயர் எட்மண்ட் டுட்டு மறைவு குறித்தும் இவர்களின் மறை வுக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலை யும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என பேரவைத் தலைவர் மு.அப்பாவு இரங்கல் தீர்மானங்களை வாசித்தவுடன், அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

இன்று சட்டப்பேரவையில் முதன் முறையாகவினா-விடைகள்நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

No comments:

Post a Comment