சென்னை, ஜன.7 இணைய சூதாட் டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவை யில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
கடந்த அ.தி.மு.க. அரசு இணைய சூதாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்ட நிலையில் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இணைய சூதாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. இதனால் பலரும் இணைய சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி லட்சக்கணக் கில் பணம், நகை ஆகியவற்றை இழந்து வருகின்றனர். அவர்களில் பலர் பெருமளவில் கடனுக்கும் ஆளாகியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக் கோட்டை அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அது மட்டுமின்றி, கடந்த சில நாட்களாக இணைய சூதாட்டம் தொடர்பாக 2 தற்கொலைகளும், ஒரு கொள்ளையும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண் டுமென பல்வேறு அரசியல் தலை வர்களும் தமிழ்நாடு அரசை வலி யுறுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான சட்டப் பேரவை முதல் கூட்டம் கலை வாணர் அரங்கில் 5.1.2021 அன்று தொடங்கிய நிலையில், இணைய ஆன்லைன் சூதாட் டம் குறித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இணைய சூதாட்டத்திற்கு விரைவில் முற் றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது, இணைய சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத் தில் நிலுவையில் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment