சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு - முதலமைச்சருக்கு பாராட்டு!
சென்னை,ஜன,7- கடந்த கால ஆட் சியில் பேரவை நிகழ்ச்சிகள் நேரலை யில் ஒளிபரப்ப வேண்டும் என்று தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது பலமுறை வலியுறுத் தியும் கடந்த கால ஆட்சியினர் அதனை செயல்படுத்த வில்லை
தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் தி.மு.க.வின் வாக்குறுதி நேற்று நிறை வேற்றப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை வரலாற்றிலேயே பேரவையில் கேள்வி நேர நிகழ்ச்சி நேற்று (6.1.2021) நேரலையில் ஒளி பரப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேர வைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் அறிவித்த கேள்வி நேரத்தின்போது முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கேள்விக்கு முதலாக பதில ளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தலைவர் கூறு கையில், மக்களாட்சியின் மாண்பினை நிறைவேற்றவும், நாடாளுமன்ற ஜன நாயகத் தைக் கட்டிக்காக்கவும் உறுதி பூண்டுள்ள தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள், நூறாண்டு கடந்த சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தான் கொடுத்த வாக் குறுதியை நிறை வேற்றும்வண்ணம், சட்டமன்றப் பேரவை நடவடிக் கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆலோசனைகளை வழங்கியதன் பேரில், இன்று, முதற் கட்டமாக, வினாக்கள் - விடைகள் நேரம் நேர டியாக ஒளிபரப்பு செய்யப் படவுள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். உறுப் பினர்கள் அனைவரும் இதை ஒரு மனதாக வரவேற்று, மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.
மக்களாட்சி தத்துவத்தின் மாண் பினைக் காத்திட அடித் தளமிட்ட பல்வேறு தலைவர்களின் வரிசையில் நின்று, இன்றைக்கு வரலாற்றுச் சிறப் புமிக்க இத்திட்டத்திற்கு கால்கோளிட முதலமைச்சர் அவர்களை, உறுப்பினர் இ. கருணாநிதி அவர்கள் அளித்த, இன்றைக்கு எடுக் கப்படவுள்ள வினா எண் ஒன்றிற்கு பதிலளிக்க மகிழ் வோடு அழைக்கிறேன்.
இவ்வாறு பேரவைத் தலைவர் குறிப்பிட்டதும் சட்டப்பேரவை உறுப் பினர் கள் அனைவரும் மேசையைத் தட்டி வரவேற்றனர்.
No comments:
Post a Comment