டெஸ்லாவில் முதல் ஊழியராக இந்தியர் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

டெஸ்லாவில் முதல் ஊழியராக இந்தியர் நியமனம்

ஹூஸ்டன், ஜன. 5-  'டெஸ்லா' நிறுவனத்தின் 'ஆட்டோ பைலட்' குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது.

இதன் நிறுவனரும், தலைமை நிர்வாக அதி காரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளம் வாயிலாக தன் நிறுவனத் திற்கு ஆள்சேர்க்கும் பணி யில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு அசோக் எல்லுசுவாமி என்ற இந் திய வம்சாவளியை எலான் மஸ்க் தேர்வு செய்துள் ளார். டெஸ்லா நிறுவனத் தின் ஆட்டோபைலட் எனப்படும், தானாக வாகனங்கள் இயங்கும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் அசோக் நிய மிக்கப்பட்டுள்ளார். ஆட்டோபைலட் குழு வில் தேர்வு செய்யப்பட்டு உள்ள முதல் ஊழியர் அசோக் எல்லுசுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment