தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 26, 2022

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலிப் பணியிடங்கள்

 


தமிழ்நாடு சுகாதார துறையில் கள உதவியாளர் (பீல்டு அசிஸ்டென்ட்) பிரிவில் காலியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : 174

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பப் பிரிவில் (சி.எம்.எல்.டி.,) ஓராண்டு படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண்.

வெயிட்டேஜ் மதிப்பெண் : சி.எம்.எல்.டி., படிப்புக்கு 50 சதவீதம், பிளஸ் 2 படிப்பில் 30 சதவீதம், பத்தாம் வகுப்பில் 20 சதவீதம் கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 300 கடைசிநாள் : 2.2.2022

விபரங்களுக்கு : http://mrbonline.in/

No comments:

Post a Comment