எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது- தலிபான்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது- தலிபான்கள்

இசுலாமாபாத், ஜன.8 எல்லையில் வேலி போட பாகிஸ்தானை அனுமதிக்க முடியாது என்று தலிபான் படை தளபதி கூறியுள்

ளார்.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ் தானுக்கும் இடையே 2,670 கி.மீ. நீளம் பன்னாட்டு எல்லை உள்ளது. இதில் இருநாடுகள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

கடந்த மாதம் பாகிஸ்தான் படையினர் நிம்ரோஸ் மாகாணத் தில் முள்வேலிகளை விரிவுபடுத்த முயற்சித்தனர்.

இதை தலிபான் படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். நங்கர்ஹார் மாகாணத்தில் இதே போன்று பாகிஸ்தான் படை வீரர்கள் முள்வேலி அமைக்க முயன்றபோதும் பிரச்சினை ஏற்பட்டது.

இது பற்றி பாகிஸ்தான் வெளி யுறவு அமைச்சர் ஷா மக்மூத் கருத்து தெரிவிக்கையில்,

 சில விஷமிகள் தேவையில்லாமல் பிரச்சினை எழுப்புகிறார்கள். நாங் கள் அதை கவனித்து வருகிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தான் அரசு டன் தொடர்பில் உள்ளோம் என கூறினார்.

இதற்கு ஆப்கானிஸ்தான் தரப் பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தலிபான் படை தளபதி சனவுல்லா சாங்கின் கூறும்போது,

நாங்கள் எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வேலி அமைப்பதை அனுமதிக்க மாட்டோம். இனி எந்த வேலியும் அமைக்கக்கூடாது என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் குரல் கொடுத்து வந்த நிலையில் இப்போது அவர்களுக்கு இடையே மோதல் போக்கு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment