தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டை கரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக்கவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தர விட்டு, மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்த மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 8.83 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 17 மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை சுமார் 3 கோடி 15 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த 3.1.2022 அன்று 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவி களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்து, அதில் 33 லட்சத்து 46 ஆயிரம் பயனாளிகள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், இதுவரை 21 லட்சத்து 52 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், பாலூட் டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப் பட்டோர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசால் சிறப்பு கவனம் அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பூஸ்டர் தடுப்பூசி: சுகாதார பணியா ளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர் களுக்கு முன்னெச் சரிக்கை தவணை (பூஸ்டர்) கரோனா தடுப்பூசி செலுத்து வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சத்து 65 ஆயிரத்து 218 சுகாதாரப் பணியாளர்கள், 9 லட்சத்து 78 ஆயிரத்து 23 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20 லட்சத்து 83 ஆயிரத்து 800 நபர்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், தகுதியான 2 லட்சத்து 6 ஆயிரத்து 128 சுகாதாரப் பணியாளர்கள், 92 ஆயிரத்து 816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட 1 லட்சத்து ஆயிரத்து 69 இணை நோய் உள்ளவர்கள், என மொத்தம் 4 லட்சத்து 13 பேர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எம். ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment