சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற கால நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற கால நீட்டிப்பு

திண்டுக்கல், ஜன.10- தமிழ் நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனி யார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயி லும் இஸ்லாமிய, கிறித் துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங் களைச் சார்ந்த மாணவ/மாணவியர்களிடமிருந்து 2021-- 2022-ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப் படையிலான கல்வி உதவித்தொகை திட்டத் தின் கீழ் (புதியது மற்றும் புதுப் பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங் களை <www.scholarships.gov.in>  என்ற இணையதளம் முகவரி யில் விண்ணப்பிக்க 15.1.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள் ளது

தகுதி வாய்ந்த சிறுபான் மையின மாணவ, மாண வியர்கள் மேற்படி காலக் கெடுவிற்குள் விண்ணப் பித்து பயன்பெறலாம். மேலும், அனைத்து கல்வி நிலையங்க ளும் சிறுபான் மையினர் கல்வி உதவித் தொகை கோரி மாணவ, மாணவியர்களிட மிருந்து வரப்பெற்ற விண்ணப்பங் களை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் சரிபார்க்க வேண்டும்.

தகுதியுள்ள சிறுபான் மையின மாணவ, மாணவி யரின் விண்ண ப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும் அல் லது தவறும் கல்வி நிலை யங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக் கப்படும் (சரிபார்க்க கடைசி தேதி: பள்ளி படிப்பு உதவித்தொகை - 15.1.2022, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி () வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை - 31.1.2022).

மேலும் விவரங்களுக்கு திண்டுக் கல் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலரை அணுகி தெரிந்து கொள் ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் .விசாகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment