பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனப் போராட்டம் அறிவிப்பு
சென்னை,ஜன.29- தமிழ்நாடு சட் டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்ட முன்வடிவுக்கு ஆளு நர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு,
தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய சட்ட முன் வடிவு, "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான சட்டம், 2021", ஆளுநர் அலுவ லகத்தில் நான்கு மாதத்திற்கும் மேலாக உள்ளது. சில ஆயிரம் இடங்களுக்காகப் பல இலட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கைத் தொடர்பானச் சட்ட முன் வடிவு.
பல இலட்சம் மாணவர்களது மன உளைச்சலையும், பெற் றோர்களின் வேதனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆளுநர் மவுனம் சாதிப்பதும் , அதை நியாயப்படுத்த குடியரசு தினச் செய்தியை பயன்படுத்துவதும் வேதனை அளிக்கிறது. இத்தகையப் போக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதம் தொடுக்கப்படும் தாக்குத லாகவே பொதுப் பள் ளிக்கான மாநில மேடை அமைப்பு கருது கிறது.
ஆளுநர் அவர்கள் சட்ட முன் வடிவை, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்ப வேண்டும், மேலும் காலம் தாழ்த் தாமல், சட்ட முன் வடிவிற்கு ஒப்புதல் வழங்க, உரிய பரிந்து ரையை பிரதமர் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை, குடிய ரசுத் தலைவருக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 (30.1.2022) அன்று சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட் டம் அருகில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் காலை 10 மணிக்குத் துவங்கும் முனைவர் பி. இரத்தின சபாபதி, (தலைவர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) போராட்ட நோக்கவுரையாற்று கிறார்.
நோக்கவுரையைத் தொடர்ந்து இணையவழியில் பேராசிரியர் சுகதியோ தோரட் மேனாள் (தலைவர், பல்கலைக்கழக மானி யக் குழு) (UGC) போராட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
பேராசிரியர் அனில் சட்கோ பால் (மேனாள் உறுப்பினர், மத்திய கல்வி ஆலோசனைக் குழுமம்) (CABE) சிறப்புரையாற் றுவார்
பேராசிரியர் வே. வசந்தி தேவி (மேனாள் துணைவேந்தர், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்) வாழ்த்துரை வழங்குவார்
தொடர்ந்து, நேரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலை வர்கள் கோரிக்கையை வலியுறுத் திப் பேசுவார்கள்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) போராட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.
மாலைக்குள் சட்ட முன் வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தனி மனிதப் போராட்டத்தைத் தொடர் வார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment