புதுடில்லி, ஜன.29 மூக்கு வழியாக செலுத்தும் வகையிலான கரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரி சோதனைக்கு ஒன்றிய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத் திக்கொண்ட சுகாதாரப்பணியா ளர்கள், முன்களப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி களும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி கடந்த மாதம் விண்ணப் பித்திருந்தது.
இந்நிலையில், பாரத் பயோ டெக் உருவாக்கியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரி சோதனைக்கு ஒன்றிய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள் ளது. மூக்குவழியாக செலுத்தப் படும் இந்த கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசாக பயன்படுத்தப் பட உள்ளது. நாடு முழுவதும் 9 இடங்களில் இந்த கரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற உள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு 3-ஆவதாக பூஸ்டர் டோஸ் தடுப் பூசி மூக்கு வழியாக செலுத்தப் பட்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
3ஆம் கட்ட சோதனைக்கு பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூக்குவழியாக செலுத்த மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுப்பதுடன், சுகாதாரத்துறை பணியாளர் களின் வேலைப்பளு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment