சொந்த வாகனங்களில் அரசு முத்திரையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

சொந்த வாகனங்களில் அரசு முத்திரையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.5 நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் அரசின் முத்திரையை பயன்படுத்தினால் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன் படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், மேனாள் எம்.பி.க் கள், மேனாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவதை சட்டரீதியாக தடுக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கில் தமிழ்நாடு டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோரை எதிர்மனு தாரர்களாக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு நேற்று (4.1.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

அதில், வாகனங்களிலும், நம்பர் பிளேட்டுகளிலும் தேசிய மற்றும் மாநில சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவது என்பது தேசிய சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகிய வற்றின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.  இத்தகைய குற்றத்தில் ஈடுபடு வோர் மீது வழக்குகள் பதிவுசெய்யப் பட்டு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வாகனங்களின் முகப்பு விளக்கு களில் வண்ண பல்புகளை பயன்படுத் தி யதாக 4 ஆயிரத்து 456 வழக்குகளும், கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டாதது தொடர்பாக 4 ஆயிரத்து 697 வழக்குகளும், தவறான நம்பர் பிளேட் தொடர்பாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 331 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதி, தேசிய மற்றும் மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட வில்லையே? குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது.

தேசிய, மாநில சின்னங்களை மேனாள் நீதிபதிகள், மேனாள் அமைச்சர்கள் மற்றும் மேனாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தவறாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பின்னர், அரசுத்துறை, நீதித் துறை, காவல்துறை, வங்கி, காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழி யர்கள் தங்களின் சொந்த வாகனங் களில் அரசின் முத்திரைகள், சின் னங்களை பயன்படுத்தினால் காவல் துறையினர் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  இதுகுறித்து  இன்று (5.1.2022) விரிவான உத்தரவு பிறப்பிக் கப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment