சென்னையில் 1,158 தெருக்களில் கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

சென்னையில் 1,158 தெருக்களில் கரோனா பாதிப்பு

சென்னை, ஜன.5 சென்னையில் மொத்தம் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக் களில், ஆயிரத்து 158 தெருக்களில் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கரோனா தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் சென் னையில் மட்டும் ஆயிரத்து 489 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். இது நேற்று முன்தினம் பாதிப்பாகிய 876-ல் இருந்து ஒரே நாளில் 613 எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை மாநக ராட்சி சார்பில் நேற்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் கூறப்பட் டுள்ள விவரங்கள் வருமாறு:-

சென்னையில் மொத்தம் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், ஆயிரத்து 158 தெருக்களில் கரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ள னர். 38 ஆயிரத்து 379 தெருக்களில் கரோனா பாதிப்பு எவருக்கும் கண்ட றியப்படவில்லை.

கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆயிரத்து 158 தெருக்களில், 3-க்கும் குறைவான கரோனா தொற்று உள்ள தெருக்களின் எண்ணிக்கை 988. அடுத்ததாக, 170 தெருக்களில் 3-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 51 தெருக்களில் 5-க்கும் மேற்பட்ட எண் ணிக்கையில் கரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

சென்னையில் மொத்தமாக 5 ஆயிரத்து 593 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் கரோனா தொற்று கண்ட றியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 17 தெருக்களில் கரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது.

இது தவிர, திருவொற்றியூர் மண்ட லத்தில் 21 தெருக்கள், மாதவரம் மண்ட லத்தில் 40 தெருக்கள், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 80 தெருக்கள், ராயபுரம் மண்டலத்தில் 141 தெருக்கள், திரு.வி.. நகர் மண்டலத்தில் 46 தெருக்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 24 தெருக்கள், அண்ணா நகர் மண்டலத்தில் 82 தெருக்கள், கோடம்பாக்கம் மண் டலத்தில் 115 தெருக்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 65 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 83 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 124 தெருக்கள், பெருங்குடி மண்டலத்தில் 44 தெருக்கள் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 48 தெருக்களில் கரோனா தொற்று கண்ட றியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக அய்..எஸ். அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment