கரோனா பரவல் அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

கரோனா பரவல் அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, ஜன.5 பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் போது கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி னார்.

உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விரைவில் கொண்டாடப்படுகிறது. அப்போது மக்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். காணும் பொங்கலின்போது உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து இருப்பது வழக்க மாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொங் கல் கொண்டாட்டங்கள் குறித்து அதி காரிகளுடன் முதலமைச்சர் மு..ஸ்டா லின் நேற்று (4.1.2022) தலைமைச் செய லகத்தில் ஆலோசனை நடத்தினார்.

என்னென்ன கட்டுப்பாடுகள்?

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை வகுப்பது, பொங்கல் திருநாள் கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது போன்றவை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆய்வு செய்து முடி வெடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கை அமல்படுத் துவது, பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்தும், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment