சென்னை, ஜன.5 அரிசி அட்டை தாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர் கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழாவை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமி ழர்கள் குடும்பங்களுக்கும் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங் களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கூட் டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப் பினை தமிழகத்தில் வழங்கிடும் பணியினை தொடங்கி வைப் பதன் அடை யாளமாக, சென் னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் 10 குடும்பங் களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக்கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கரோனா பெருந்தொற்று பாது காப்பு நடவடிக்கைகளை பின் பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசு தொகுப்பினை விநியோகத் திட அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக் கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அந்த குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச் சர்கள் அய்.பெரியசாமி, அர. சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment