எடமேலையூர், ஜன.27 மன்னார்குடி கழக மாவட்டம், எடமேலையூர் சுய மரியாதைச் சுடரொளி சட்ட எரிப்பு போராட்டவீரர் நடேசன் அவர்களின் மகன், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், வீ.சுந்தர்ராஜன் ஆகியோரின் மாமனார், ஜெகதாராணி, ஜெயபிரபா, ஜெயநளினி ஆகியோரின் தந்தையார் திராவிடர் கழக எட மேலையூர் கிளை செயலாளர் ந.லெட் சுமணனின் 75 ஆம் பிறந்தநாள்(பவள விழா) 25.01.2022 அன்று நடைபெற்றது. காலை 11 மணியளவில் மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் எடமேலையூர் தந்தை பெரியார் சிலைக்கு பவள விழா நாயகர் மாலை அணிவித்தார். பிறகு இல்லத்தில் கேக் வெட்டி பவள விழா கொண்டாடப்பட்டது
மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செய லாளர் கோ.கணேசன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, கழக சொற் பொழிவாளர் இராம. அன்பழகன், மன் னார்குடி ஒன்றியத் தலைவர் தமிழ் செல்வன், ஒரத்தநாடு மேனாள் ஒன்றிய செயலாளர் அ.உத் திராபதி, நீடாஒன்றிய துணைத் தலைவர் எடமேலையூர் வீராச்சாமி, தமிழரசன்(தி.மு.க) காமராசு, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி, தீரன், மகள்கள் ஜெக தாராணி,தஞ்சை மேனாள் கவுன்சிலர் அனிதாராணிராஜா, மருமகன்கள் ராஜா, திராவிடர் கழக பொதுச்செய லாளர் இரா.ஜெயகுமார், பேரப் பிள்ளைகள் ஜெ.ஜெ.கவின், ஜெ.ஜெ. காவியா ஆகியோர் பவளவிழா நாயகர் லெட்சுமணனுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்
எடமேலையூர் வீராச்சாமி வாழ்த்துரை
பவளவிழா நாயகர் எடமேலையூர் லெட்சுமணன் அவர்களின் தந்தையார் நடேசன், ஆறுமுகம் ஆகியோர் பல எதிர்ப்புகளுக்கிடையே 1947 இல் திருக் குறள் முனுசாமி, மாணவர் கி.வீரமணி (15 வயது சிறுவன்) ஆகி யோரை அழைத்து எடமேலையூரில் பொது இடத்தில் கூட்டம் நடத்த முடியாமல் தனியார் இடத்தில் பொதுக் கூட்டத்தை நடத்தி னார்கள்
அந்த கூட்டத்தில் சிறுவன் வீரமணி பேச்சை கேட்டுதான் நான் திராவிடர் கழகத்தில் இணைந்தேன், எடமேலை யூரில் 35 கழகத் தோழர்கள் ஜாதியை ஒழிக்க தந்தை பெரியாரின் ஆணையை ஏற்று அரசமைப்புச் சட்டத்தை எரித்து கைதானர்கள். அதில் லெட்சுமணன் தந் தையார் நடேசனும் ஒருவர், தீவிரவாதி, யாருக்கு யார் அடிமை போன்ற நாடகங்களை நாங்களே எழுதி நடத் தினோம். நடேசன், சாம்பசிவம், ஆறு முகம் உள்ளிட்டோருடன் நாங்களே நடிப்போம். பொதுமக்களிடம் வர வேற்பை பெற்றது. இந்த குடும்பத்திற்கு என்று இயக்கத்தில் வரலாறு உண்டு. அந்த குடும்பத்தின் லெட்சுமணன் பவள விழா காண்பதில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடமேலையூர் வீராச்சாமி வாழ்த்திப் பேசினார்
அனைவருக்கும் மகள் லெ. ஜெகதா ராணி நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment