பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடலில் தீர்மானம்
பெரம்பலூர், ஜன. 3- தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கோரிக்கை வைப்பதென பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையா டல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.
30.12.2021 அன்று மாலை 6 மணி யளவில், பெரம்பலூர் மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகத்தில் பெரம்பலூர் கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரம்பலூர் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர் க.இரா ஜாகென்னடி தலைமையேற்று உரை யாற்றினார்.
இந்நிகழ்வின் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார் கலந்துகொண்டு தொடக்க உரை ஆற்றினார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ் பிர பாகரன் சிறப்புரையாற்றினார். பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கந்தசாமி கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரையாற் றினார். ப.க மாவட்ட தலைவர் நட ராஜன் நன்றியுரை கூறினார்..
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் சி மற்றும் டி பிரிவு அலுவலர்களுக்கும், ஓய்வூதியர் களுக்கும் பொங்கல் வெகுமதி அறிவித்ததோடு இரண்டாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட 14 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழ்நாடு முதல் வரை பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் பாராட்டி மகிழ்ந்து வரவேற்கிறோம்.
தீர்மானம் 2
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்து அரசு பள்ளிகள் அலுவலகங்கள் ஆகிய இடத்தில் கொண்டாடிய முதலமைச்சர் அவர்க ளுக்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி சார் பில் பாராட்டி வரவேற்கிறோம்.
தீர்மானம் 3
இனிவரும் காலங்களில் அரசின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் மொழி கட்டாயம் என்று ஆணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சரை பகுத்தறிவு ஆசிரியரணி பாராட்டி மகிழ்கிறது.
தீர்மானம் 4
பெரம்பலூர் மாவட்டத்தில் மண்ட லம், மாவட்டம், ஒன்றியம் நகர வாரி யாக பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப் பாளர்களை நியமித்தல் முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படுதல் என்பதை கலந்துரையாடல் கூட்டம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 5
ஒவ்வொரு மாதமும் பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் இரண்டாவது சனிக்கிழமை அன்று பகுத்தறிவு, சமூக நீதி, கல்வி, தொடர்பான தலைப்புகளில் மாதாந்திரக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6
தை 1ஆம் தேதியே தமிழ்ப் புத் தாண்டு அறிவித்த பச்சையப்பன் கல் லூரியில் தமிழ்நாட்டு அறிஞர்கள் கோரிக்கை விடுத்தபடியும், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர் கள் அறிவித்தபடியும் தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறி விக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
தீர்மானம் 7
பள்ளிக் கல்லூரிகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையி லும், மூட நம்பிக்கையினை முறியடிக்கும் வகையிலும் பள்ளி கல்லூரிகளில் மந் திரமா? தந்திரமா? போன்ற அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் க.இராஜா கென்னடி,
மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் வ.சீத்தாபதி,
மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் கு.நவநீதசோழன்,
மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் ரவிக்குமார்,
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நடராஜன், திருவாரூர் மாவட்ட ஆசிரியரணி தலைவர் ஆறு முகம், பெரம்பலூர் மாவட்ட ஆசிரி யரணி தலைவர் சீத்தாபதி, பெரம்பலூர் திராவிடர் கழக நகர தலைவர் ஆறு முகம், பெரம்பலூர் நவநீதசோழன், ஆத்தூர் வினோத்குமார், பழனிவேல், முருகானந்தம், திருவாரூர் ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மனோஜ், பிரதீப், பிரகாஷ், விஜய ராகவன். ராமு, மருத்துவர் குணகோமதி, பூங்கொடி கார்த்திகேயன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment