காரைக்குடி என்.ஆர்.சாமி- பேராண்டாள் வணிக வளாகம் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 3, 2022

காரைக்குடி என்.ஆர்.சாமி- பேராண்டாள் வணிக வளாகம் திறப்பு

சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி - மேனாள் அமைச்சர் மு.தென்னவன் திறந்து வைத்தனர்

காரைக்குடி,ஜன.3- சிவகங்கை மண்டல மேனாள் செயலாளர் சாமி.சமதர்மம், சிவகங்கை மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி, சாமி.திராவிடச்செல்வம் ஆகியோரின் பெற்றோர் காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி- பேராண்டாள் அம்மாள்  பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட வணிக வளாகம் திறப்பு விழா 01-01-2022 அன்று சனிக்கிழமை காலை ராகு காலத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு காரைக்குடி தொழில் வணிக கழகச் செயலாளர் லயன்ஸ் எல்.கண்ணப்பன் தலைமை வகித்தார். பொறியாளர் சா.நடராசன் முன்னிலை வகித்தார். என்னாரெசு பிராட்லா, புருனோ என்னாரெசு ஆகியோர் வரவேற்றனர்.

தி.மு.கழக மாநில இலக்கிய அணித் தலைவரும் மேனாள் அமைச்சருமான சீரிய பகுத்தறிவாளர் மு.தென்னவன் வணிக வளாகம் மற்றும் என்.ஆர்.சாமி-பேராண்டாள் படத்தையும், காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி என்.ஆர்.சாமி.ஸ்டோர்ஸின் புதிய கிளை நிறுவனத்தையும் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ..பழனிவேலு, சாக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் கல்லூர் செல்வமணி, கல்லல் ஒன்றிய தலைவர் பலவான்குடி .சுப்பையா, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ.பாலு, தேவகோட்டை ஒன்றிய அமைப்பாளர் வாரியன்வயல் ஜோசப், மாவட்ட .. தலைவர் எஸ்.முழுமதி, மேனாள் மாவட்ட ..தலைவர் .சுந்தரம், குறள் மிகு சுப.பரமசிவம், ..எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் .குமரன்தாசு, ..தோழர் .சண்முக நாதன், மூ.வெங்கடேசன் உள்ளிட்ட தோழர்களும், காரைக்குடி நகர தி.மு.. செயலாளர் நா.குணசேகரன், மேனாள் நகர்மன்றத் தலைவர் சே.முத்துத்துரை, நகர தி.மு.. துணைச் செயலாளர் சொ.கண்ணன், மாவட்ட தி.மு.. பிரதிநிதி சேவியர், கல்லல் ஒன்றிய மேனாள் பெருந்தலைவர் இலுப்பக்குடி சுப.முத்துராமலிங்கம்,

மாவட்ட தி.மு..இலக்கிய அணித் தலைவர் புலிகுத்தி இராம.சீனிவாசன், மாவட்ட தி.மு‌.. சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் அன்னை மைக்கேல்,  மாவட்டப் பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.பாண்டிச்செல்வம், உஞ்சனை இராம.இராமகிருஷ்ணன், தமிழக மக்கள் மன்றம் தலைவர் .மீ.இராசக் குமார், அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் சிறப்பு அலுவலர் .இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அவரது வாழ்வி ணையர் திருமதி வீ.மோகனா அம் மையார் ஆகியோர் அலைபேசியில் அழைத்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்புச் செயலா ளர் வே.செல்வம், சிவகங்கை வழக்கு ரைஞர் .இன்பலாதன் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.

வணிக வளாகத்திலும் அதைச் சுற்றியும் கழகக் கொடிகள் கட்டப் பட்டிருந்தது.

கலந்து கொண்ட அனைவருக்கும் "பெரியார் வாழ்க்கை குறிப்பு", தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் "வாழ்வியல் சிந்தனைகள்" தொகுதி 16, "புத்தர் படக்கதை" ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment