திருத்துறைப்பூண்டி, ஜன. 3- திருத் துறைப்பூண்டியில் "தந்தை பெரியார்" அவர்களின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் (24-12-2021) காலை 10:00 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள "அறிவுலக ஆசான் தந்தை பெரியார்" அவர்களின் 48 ஆண்டு நினைவு நாள் திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல செயலாளர் சு.கிருஷ் ணமூர்த்தி தலைமையில் திரு வாரூர் மண்டல மாணவரணி செயலாளர் அஜெ.உமாநாத், மாவட்ட இளைஞரணி செய லாளர் மு.மதன் ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ் வில் நகர தலைவர் தி.குண சேகரன், நகரச் செயலாளர் ப.நாகராஜன், ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன், ஒன்றிய செய லாளர் இரா.அறிவழகன், பள் ளத்தெரு செல்லப்பா, திருநெல் வேலி சு.மணிகண்டன், ஆகி யோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் நகரச் செய லாளர் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமையில் மாவட்ட வர்த் தக அணி செயலாளர் சிக்கந்தர் மாலை அணிவித்தார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் நகரச் செயலா ளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
தே.மு.தி.க நகர செயலாளர் தம்பி டி.ஆர்.முரளி அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் பி.பாலு மாலை அணிவித்தார்கள்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலை வர் ப.எழிலரசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
எல்.ஐ.சி.சார்பில் முரு கேசன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் கு.நேரு ஆகியோர் மாலை அணி வித்தார்கள். மற்றும் அனைத்து கட்சி தோழர்கள்லும் தொண் டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment