மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

மறைவு

பம்மல் பகுத்தறிவாளர் பேரவையின் தலைவரும், இலக்கிய மன்ற மேனாள் தலைவரும், ஆசிரியர் மேல் மிகுந்த பற்றுக் கொண்டவருமாகிய பொன்.இராமச்சந்திரன் 25.1.2022 அன்று மதியம் மறைவுற்றார்.

பம்மல் கிளைக்கழகத் தலைவர் .கோபி, பேரவைச் செயலாளர் வை.பார்த்திபன், இலக்கிய மன்ற தலைவர் புலவர் ஆறுமுகம் மற்றும் அனைத்துக்கட்சிப்பிரமுகர்களும் வீரவணக்கம் செலுத்தியபின், அன்னாரது இறுதி நிகழ்வுகள் 26.1.2022 அன்று, எந்தவித மூடச்சடங்குகளுமின்றி குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்புடன் குரோம்பேட்டை மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

மறைந்த பொன்.ராமச்சந்திரன், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளின்போது, நேரில் சந்தித்து, பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை செலுத்தி தனது நன்றிக்கடனை தெரிவித்துக்கொண்டார்.

விடுதலை, உண்மையின் நீண்ட நாள் வாசகருக்கு, பகுத்தறிவாளர் பேரவை தனது வீர வணக்கத்தைத் கூறிக் கொள்கிறது.

வை.பார்த்திபன், செயலாளர்.

No comments:

Post a Comment