வடக்குத்து இந்திரா நகர் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் விளக்க பிரச்சார கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

வடக்குத்து இந்திரா நகர் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் விளக்க பிரச்சார கூட்டம்

பேராசிரியர் சுப வீரபாண்டியன் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை

கடலூர், ஜன.30 கடலூர் மாவட்டம், வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில்  28.1. 2022 வெள்ளி மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை இந்திரா நகர் மணி அய்..எஸ் அகடமி அரங்கில் பெரியாரியல் விளக்க பிரச்சார கூட்டம் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி தலைமையில், மண்டல தலைவர் பன்னீர்செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் ரமா பிரபா ஜோசப் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் சிங்கராயர், மாவட்ட தலைவர் முகிலன், நகர தலைவர் பெரியசாமி, அமைப்பாளர் முத்துராஜ், வடலூர் தலைவர் புலவர் ராவணன், மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள், கலைச்செல்வி, விஜயாஇ மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ரேவந்த் ஆண்டனி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, வடலூர் இந்திரஜித், வடலூர் மோகன், மாவட்ட பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் மாணிக்கவேல், நெய்வேலி ராஜா சிதம்பரம், அண்ணாகிராமம் திமுக பிரமுகர் பலராமன், இந்திரா நகர் திமுக செயலாளர் கருணாநிதி, நூலகர் கண்ணன், கடலூர் நகர டீக்கா தலைவர் எழில் ஏந்தி, நிகழ்விட உரிமையாளர் மணிகண்டன், வடலூர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பேராசிரியர் சுப.வீ. தமது உரையில், தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடியபோது அவமரியாதை செய்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளை கண்டித்தும் திருக்காட்டுப்பள்ளியில் இறந்த மாணவி லாவண்யா பிரச்சனையில் பொய்யாக புகார் தந்து  மதமாற்றம் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்துவரும் பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கண்டித்தும் விளக்கமாக பேசினார். தந்தை பெரியார் கொள்கை தரணிக்கே வழிகாட்டக் கூடியது. இறுதி வெற்றி பெரியார் கொள்கைக்கு என்பதாக தமது உரையில் குறிப்பிட்டார். முடிவில் கிளைக் கழக தலைவர் தங்க.பாஸ்கர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment