வடக்குத்து, ஜன.30 குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகத்தில்14.1.2022 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெரியாரியல் பயிற்சி வகுப்பு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில் நடைபெற்றது அண்மையில் இயக்கத்தில் சேர்ந்த புதிய இளைஞர்களுக்கு கொள்கை வகுப்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு அமைந்தது.
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பயிற்சி வகுப்பினை நடத்தினார் சிரிக்கவும் சிந்திக்கவுமான வகுப்பாக அமைந்தது. புதிய வரவுகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலும் உரைக்கப்பட்டது தோழர் கமலநாதன் வகுப்பை ஒருங்கிணைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ஆண்டனி ,கிளை கழக தலைவர் பாஸ்கர் ,திமுக பேச்சாளர் தமிழரசன், புலவர் சு.ராவணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர் .முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment