சேலம் கோழிக்கால் நத்தம் வடிகப்பட்டி வழியாக வைகுந்தத்திற்கு சாலை அமைக்கவேண்டும் என்று உறுப்பினர் கேள்வி கேட்டு, அதற்கு அமைச்சர் பதில் அளித்திருக்கிறார்.
முதலில் வைகுந்தத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்றால், கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெறவேண்டும்; அவரிடம் அனுமதி வாங்கி னீர்களா? என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, இந்த ஆட்சியில் ஆன்மிகத்திற்கென்று போடப்பட்டுள்ள அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிவலோகம் போவதாக இருந்தாலும், அதற்கு வழிகாட்டுவார் என்று கூறியுள்ளார்.
இந்தக் கேள்வி - பதிலில் ஒன்றே ஒன்று விடுபட்டுப் போயிருக்கிறது.
வைகுந்தம் போகிறவர்கள் அப்படியே வைகுந்தம் போவார்களா? திரும்பி வீட்டுக்கு வருவார்களா? என்பதுதான் அந்த முக்கிய கேள்வி.
கிருஷ்ணனை ‘டிஸ்டர்ப்' பண்ணாதீர்கள்; அவ னுக்கு 60 ஆயிரம் காதலிகள் - என்ன புரிகிறதா?
No comments:
Post a Comment