ஆம்ஸ்டர்டாம், ஜன. 5- கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டிய லில் 19 ஆம் இடத்தில் இருக்கும் நெதர்லாந்தில் இதுவரை 33 லட் சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பிரதமர் மார்க் ரட்டே ஊரடங்கு நடவடிக்கை களை மேற்கொண்டார். கடைகள், உணவகங்கள், மதுபான விடுதிகள், திரையரங்குகள், அருங்காட்சியங் கள் ஜனவரி 14 வரையும், கல்விக் கூடங்கள் ஜனவரி 9 வரையும் மூடப் பட்டிருக்கின்றன. இந்த கட்டுப் பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்தில் மக்கள் போராட் டத்தில் குதித்திருக்கிறார்கள்.
ஆம்ஸ்டர்டாமில் பேரணியாக சென்ற மக்கள் ஊரடங்கு நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்து குரலெழுப்பினர். பேரணியை தடுக்க காவலர்கள் முற்பட்டபோது இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவலர் களை தாக்கிய நூற்றுக்கு மேற்பட் டவர்களை காவல்துறையினர் கைது செய்து இழுத்துச் சென்றனர். பொதுமுடக்கத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் நெதர்லாந்து மக்கள், பிர தமர் மார்க் கரோனா கட்டுப்பாடு களை தளர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் ஒரே நாளில் மட்டும் 17,500 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப் பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment