ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்றிட நீதி மன்றம் உத்தரவு. அங்கெங்கினாதபடி கடவுள் இருக்கிறார் என இந்து புராணங்கள் சொல்லும் நிலையில் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* .பி. மட்டுமல்ல, குஜராத் மாநிலத்திலும் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் பா...விற்கு ஆச்சரிய தோல்வி காத்திருக்கிறது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு.

தி டெலிகிராப்:

* பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் மோடி அரசு தேச விரோதத்தை செய்துள்ளது என ராகுல் காந்தி சாடல்.

* தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் உத்தரவிட வேண்டும் என பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பு வேண்டுகோள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மேற்கு .பி.யில் போட்டியிடும் பாஜக வேட் பாளர்கள் பிரச்சாரம் செய்ய முடியாமல் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment