ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழப்பு..!! உக்ரைன் அதிபர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 25, 2022

ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழப்பு..!! உக்ரைன் அதிபர் அறிவிப்பு

கீவ், பிப்.25 ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக் கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறிய ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக போர் பிரகடனம் செய்தார். அப்போது மாஸ்கோ நேரம், நேற்று (24.2.2022) அதிகாலை 5.55 மணி. தொடர்ந்து வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத் தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிடபெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கின. அப்பொது கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங் குகள் மீது ரஷ்யா ஏவு கணை தாக்குதலை தொடங் கியது. பல நகரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

கீவ் பிராந்தியத்தின் வடக்கே ரஷ்ய படைகள் புகுந்தன. ஒடே சா பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மட்டும் 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  கீவ் நகரை அடுத்துள்ள புரோவாரி நகரில் தொடர்ந்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கீவ், கார்கிவ், ஒடேசா மற்றும் பிற நகரங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பிற்பகலில் கீவ் நகருக்கு சற்று வெளியே ஹோஸ்டோமலில் உள்ள ஆண்டனோவ் சர்வதேச விமான நிலையத்தின்மீது ரஷ்யா கடுமையான வான்தாக்கு தலை நடத்தியது. அங்கு ரஷ்யாவின் எம்.அய். 8 ரக ஹெலிகாப்டர்கள் டஜன்கணக் கில் செயல்பட்டதை காணொலி காட்சிகள் காட்டின.

ரஷ்ய படைகளின் தாக்கு தலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக் கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக் கான அடிப்படை மய்யம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு களின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும். மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச் சக உளவுப்பிரிவு தலை மையகமும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு தப்ப வில்லை.

நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். உக் ரைன் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல் லப் பட்டனர். கீவ் நகர் அருகே 14 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது.

நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொது மக்கள் என 68 பேர் பலியானதாக உக் ரைன் அதிகாரி களை மேற்கோள் காட்டி செய்தி நிறு வனம் ஒன்று கூறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப் பட்டுள்ளதாக உறு திப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவித் திருந்தன.

தலைநகரம் கீவ் உள்பட எங்கு பார்த் தாலும் ஏவுகணை தாக்குதலும், குண்டு மழையும் ஒரு சேரப் பொழிந்து வருவதால் உக்ரைன் மக்கள், தங்கள் உயிரைக்காக்க பரிதவித்தவாறு வெளியேறத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் ரஷ்யாவுட னான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந் துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய அவர், ரஷ்யப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர். இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொது மக்கள் அடங்குவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஷ்ய படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும் என்றும் ரஷ்ய படைகளுக்கு எதிராக களமி றங்கும் அனைவருக்கும் ஆயு தங்கள் வழங்கப்படும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

ரஷ்ய தரப்பில் சேதமே இல்லையா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணு வம் சிறைப்பிடித்தும் இருக் கிறது.

உலக வங்கி நிதி உதவி

தொடர்ந்து, உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு உடனடியாக உதவிகள் வழங்க தயாராக இருக்கிறோம்.  அதி வேக நிதி பகிர்வு உள்பட உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

இதுதவிர, உலக வங்கி குழு வானது உதவிகளை உடனடி யாக வழங்குவதற்கு, எங்களு டைய அனைத்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உபகர ணங்களை பயன்படுத்தி கொள் ளும் என்றும் தெரிவித்துள்ளது.

உலக வங்கி குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ், அதிர்ச்சிகர வன்முறை மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றால் உலக வங்கி குழுவானது அதிர்ச்சி யடைந்து உள்ளது.  உக்ரைனின் நீண்டகால நண்பராக உள்ள நாங்கள், இந்த நெருக்கடியான தருணத்தில் உக்ரைன் மக்க ளுக்கு ஆதரவுடன் இருப்போம் என்றும் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment