வாசிங்டன், பிப்.25 உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தி ருப்பதாவது:- அதிபர் புதின் பேரழிவு விளைவிக்கக்கூடிய மற்றும் மனித இனத்திற்கு துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார். உக்ரைன் மக்கள் ரஷ்ய ராணுவப் படைகளால் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும்.
நான் வெள்ளை மாளிகையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறேன். தேசிய பாதுகாப்பு குழுவிடமிருந்து வரும் தகவல்களைப் பெற்று வருகிறேன். உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜி7 அமைப்பு தலைவர்களுடன் சந்திப்பு நிகழ உள்ளது. நாங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என பைடன் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடையே மின் வெட்டு இலங்கையில் தொடரும் நெருக்கடி
கொழும்பு, பிப்.25 வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையால், எரிபொருளை இறக்குமதி செய்யக் கூட போதிய நிதி இன்றி தவித்து வருகிறது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையால், எரிபொருளை இறக்குமதி செய்யக் கூட போதிய நிதி இன்றி தவித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது. பெட்ரோல் பங்குகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை காண முடிகிறது. இதற்கு மத்தியில், இலங்கையில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 700 மெகா வாட் அளவுக்கு தேசிய பவர் கிரிட்டில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சுழற்சி முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment