திருவொற்றியூர், பிப். 9- சென்னை மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்த 29 ஆயிரத்து 134 மின் னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ஆம் தேதி நடை பெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் நடை பெறும் தேர்தலில் 29 ஆயிரத்து 134 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளும், 13 ஆயிரத்து 535 மின் கட்டுப்பாட்டு எந் திரங்களும் பயன்படுத்தப் பட உள்ளது.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் மின் கட்டுப்பாட்டு எந்திரங் களை மணலி மண்டல அலுவலகத்தில் உள்ள தனி, தனி அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு, அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.
தேர்தல் நடைபெறுவ தற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப் பட்ட வேட்பாளரின் சின்னம் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத் தில் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment