சென்னை, பிப். 9- 17.9.2021 அன்று தந்தை பெரியார் அவர்களின் 142 ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சாரல் சமூக நலன் மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில் தோழர் அ.மதிவாணன் தலைமையிலான நண்பர்கள் குழுவுடன் இணைந்து மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியை பள்ளிக் குழந்தைகளை கொண்டு தந்தை பெரியார் அவர்களை பொது மக்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் அறியும் வண்ணம் நிகழ்ச்சியை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பச்சைக் கொடி காட்டி தொடக்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிக் குழந்தை களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி குழந்தை களை மகிழ்ச்சியடைய வைத்தனர் தொடர்ந்து 24.12.2021 அன்று தந்தை பெரியார் அவர்களின் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளை கொண்டு ஓவிய போட்டி வைத்து தந்தை பெரியார் மற்றும் இயற்கை காட்சிகளை ஓவியமாக பல வண்ணங்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஓவிய போட் டியில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்கு முன் பல அறிவு சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மாலையில் நடத்தி பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.
பரிசு பொருட்களை தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமையில் பல்லா வரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தந்தை பெரியார் அவர்களை பற்றியும் மற்றும் பல சிறப்புகளை பற்றி உரையாற்றினார்கள். தொடர்ந்து திராவிடர் கழக மாணவர் கழக மாநில தலைவர் பிரின்சு என்னாரசு பெரியார், ப.முத்தையன் ஆகியோர் பள்ளி குழந்தை களுக்கு பரிசுகள் வழங்கினர்.
2022 ஜனவரி 14 மற்றும் 15 இரு தினங்கள் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழ கம் மற்றும் சாரல் சமூக நலன் மற்றும் விளை யாட்டுக் கழகமும் இணைந்து சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது 14.1.2022 அன்று காலை குறிப்பாக பெண்கள் கோலப்போட்டி,சிறுவர்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் தேக்கரண்டி எலுமிச்சை பழ ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
15.1.2022 அன்று மாலை வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுப் பொருட்களை பரங்கிமலை ஒன்றிய தி.மு.கழக செயலாளர் த.ஜெயகுமார் ம.தி.மு.கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மா.வை.மகேந்திரன் மற்றும் ம.தி.மு. கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் துரை.மணிவண்ணன் ஆகியோர் வழங்கினர்.
26.1.2022 அன்று இந்திய ஒன்றியரசு தலை நகர் டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த தமிழ் நாடு வரலாற்று தலைவர்கள் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வா.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார் ஆகிய தலைவர்களின் வரலாற்று ஊர்திகளை விழா அணிவகுப்பில் புறக்கணித் ததை கண்டித்து திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 26.1.2022 அன்று தமிழர்கள் இல்லங்கள் மற்றும் தமிழ் நாடு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்மொழி உணர்வாளர்கள் அவரவர் அலுவலகங்களின் முன்பு இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு மற்றும் பொது மக்கள் இச்செய்தியை அறியும் வண்ணம் அந்தந்த ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் மனு கொடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விட்டதன் பேரில் தி.மு.க தலை மையில் அமைந்துள்ள கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புடன் திராவிடர் கழகம் மற்றும் சாரல் அமைப்புச் சார்பில் 26.1.2022 அன்று காலை 8.30 மணிக்கு சென்னை குரோம் பேட்டை லட்சுமிபுரம் பெரியார் மன்றத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து வாகனத்தில் சிறிய ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள 40 தெரு முனைகளில் வாகனத்தை நிறுத்தி 10 நிமிடங்கள் தொடர் கண்டன உரை நிகழ்த்தி பொது மக்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் சாரல் சமூக நலன் மற்றும் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்தியதை பொது மக்கள் மத்தியில் தந்தை பெரியார் மற்றும் வரலாற்றுத் தலைவர்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர். ப.முத்தையன், கோ.நாத்திகன், பெரியார் மன்ற பாதுகாவலர் சா.கமலக்கண்ணன், அ.இராசேந் திரன், வை.கலையரசன், உடுமலை வடிவேல், அ.மதிவாணன், கானா முத்து, டாக்டர் திருமாறன் செங்குட்டுவன், ப.தமிழ்க்குடிமகன், பா.கார்த்திக், பாக்கியநாத், உஷா சந்திரசேகர், பி.எஸ்.கங்கா, ச.ரகமத், ஜி.சரத்குமார்,மு.சிறீதர், இ.பாலாஜி, மு.அன்சாரி, தாம்பரம் சு.மோகன் ராஜ் மற்றும் மா.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment