தமிழ்நாட்டில் கரோனா : புதிதாக 4519 பேருக்கு தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 9, 2022

தமிழ்நாட்டில் கரோனா : புதிதாக 4519 பேருக்கு தொற்று

சென்னை, பிப் 9:  தமிழ்நாட்டில் புதிதாக கரோனா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (8.2.2022)

 4,519-ஆகக் குறைந்தது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 792 பேரும், அதற்கடுத்தபடியாக கோவையில் 778 பேரும், செங்கல்பட்டில் 398 பேரும், திருப்பூரில் 276 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 20,237 பேர் விடுபட்டு நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,92,559-ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கரோனாவால் பாதிப்புக்குள் ளாகி மேலும் 37 பேர் பலியானதையடுத்து இந்தத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,809-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும்  சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 90,137-ஆக இருப்பதாக மக்கள் நல் வாழ்வுத் துறை தெரிவித்தது.

No comments:

Post a Comment