சென்னை, பிப்.26 மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ஆம்தேதி தமிழ் நாடு முழுவதும் நடந்தது. தமிழ்நாட்டில் 21 மாநக ராட்சிகள், 138 நகராட்சி கள் மற்றும் 489 பேரூராட் சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதி வாகின. பதிவான வாக் குகள் எண்ணும் பணி கடந்த 22ஆம்தேதி நடந் தது. தேர்தல் முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மாநகராட்சி, நக ராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வாக்கு சதவீதத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யம் வெளி யிட்டு இருக்கிறது.
மாநகராட்சியில் பெற்ற வாக்குகள்: அதன்படி, மாநகராட்சியை பொறுத் தவரையில் தி.மு.க. 43.59 சதவீதம், அ.தி.மு.க. 24 சதவீதம், சுயேச்சைகள் 8.48 சதவீதம், பா.ஜ.க. 7.17 சதவீதம், காங்கிரஸ் 3.16 சதவீதம், நாம் தமிழர் கட்சி 2.51 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 1.82 சதவீதம், பா.ம.க. 1.42 சதவீதம், அ.ம.மு.க. 1.38 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1.31 சதவீதம், தே.மு.தி.க. 0.95 சதவீதம், ம.தி.மு.க. 0.90 சதவீதம், இந்திய கம்யூ னிஸ்டு 0.88 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் 0.72 சதவீதம் வாக்குகளை பெற்று இருக்கின்றன.
நகராட்சி பெற்ற வாக்கு கள்: நகராட்சியை எடுத் துக் கொண்டால், தி.மு.க. 43.49 சதவீதம், அ.தி.மு.க. 26.86 சதவீதம், சுயேச் சைகள் 14.25 சத வீதம், பா.ஜ.க. 3.31 சதவீதம், காங் கிரஸ் 3.04 சதவீதம், பா.ம.க. 1.64 சதவீதம், அ.ம.மு.க. 1.49 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 0.82 சதவீதம், நாம் தமிழர் கட்சி 0.74 சதவீதம், ம.தி. மு.க. 0.69 சதவீதம், தே.மு. தி.க. 0.67 சதவீதம், வி.சி.க. 0.62 சதவீதம், இந்திய கம்யூ னிஸ்டு 0.38 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.21 சத வீதம் வாக்குகளை மக்களி டம் பெற்று இருக்கின்றன.
பேரூராட்சிகளில் பெற்ற வாக்குகள்: இதேபோல் பேரூராட்சிகளை பொறுத்த வரையில், தி.மு.க. 41.91 சதவீதம், அ.தி.மு.க. 25.56 சதவீதம், சுயேச்சைகள் 16.32 சதவீதம், பா.ஜ.க. 4.30 சதவீதம், காங்கிரஸ் 3.85 சதவீதம், பா.ம.க. 1.56 சத வீதம், அ.ம.மு.க. 1.35 சத வீதம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு 1.34 சதவீதம், நாம் தமிழர் கட்சி 0.80 சதவீதம், வி.சி.க. 0.61 சதவீதம், தே.மு.தி.க. 0.55 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 0.44 சதவீதம், ம.தி.மு.க. 0.36 சதவீதம், மக்கள் நீதி மய் யம் 0.07 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
அந்தவகையில் ஒட்டு மொத்த மாக கட்சிகள், சுயேச்சைகள் பெற்ற வாக்கு சதவீதத்தை பார்க் கையில், தி.மு.க. 42.99 சதவீதம் பெற்று முதலிடத் தை பெற்றுள்ளது.
அ.தி.மு.க. 25.47 சதவீதம், சுயேச்சைகள் 13.01 சதவீதம், பா.ஜ.க. 4.92 சதவீதம், காங்கிரஸ் 3.35 சதவீதம், பா.ம.க. 1.54 சத வீதம், அ.ம.மு.க. 1.40 சத வீதம், நாம் தமிழர் கட்சி 1.35 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1.15 சதவீதம், தே.மு.தி.க. 0.72 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.70 சத வீதம், ம.தி.மு.க. 0.65 சத வீதம், வி.சி.க. 0.65 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 0.56 சதவீதம் வாக்குகளை பெற் றுள்ளன.
No comments:
Post a Comment