சென்னை, பிப். 27- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை நந் தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் வளாகத்தில் 45ஆவது சென்னை புத்தகக் காட்சி 16.2.2022 முதல் 6.3.2022 வரை நடைபெறுகிறது. நான்கு கடை களை உள்ளடக்கிய அரங்காக தி--38 அரங்கில் பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
தி--38 அரங்கில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வன வெளியீடுகள், திராவிடர் கழக (இயக்க) வெளியீடுகள் வாசகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சொற்பொழிவுகள், கட்டுரை கள் அடங்கிய புத்தகங்கள் பல் வேறு தலைப்புகளில் பகுத்த றிவு மணம் கமழும் தொகுப்பு கள் கருத்துக்கருவூலங்களாக பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனம் சார்பில் மலிவுப் பதிப்பாக வெளியிடப்பட்டு வருகிறது.
அறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ்செழி யன், நீதிக்கட்சித் தலைவர்கள், கல்வி வள்ளல் காமராசர் உள் ளிட்ட தலைவர்களின் புத்தகங் கள், பன்னாட்டு பகுத்தறிவா ளர்களின் ஆங்கில, தமிழாக்க புத்தகங்கள், தந்தைபெரியார் எழுதி 42 பதிப்புகளைக் கடந்த பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம், தந்தைபெரியார் வாழ்க்கை வரலாறு, பெரியார் களஞ்சியம் தொகுதிகள், பெரி யாரியல் பாகங்கள், மனுநீதி ஒருகுலத்துக்கொரு நீதி உள் ளிட்ட பல்வேறு புத்தகங்கள் அரங்கில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியார் புத்தகங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
No comments:
Post a Comment