லாகூர், பிப். 27- பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக் கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள் ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத் திச் சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின் னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது.
அந்நாட்டில் சிறு பான்மையோராக இருக்கும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்டோ ருக்கு எதிராக நடக்கும் அராஜகங்களை பற்றி மனித உரிமை அமைப்பு களோ அல்லது அரசியல் வாதிகளோ கூட பேச முன்வரவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றங்களில் கூட நீதி கிடைக்கவில்லை என லண்டனை அடிப்படை யாக கொண்ட, பாகிஸ் தானின் சிறுபான்மை யோருக்கான நீதி அமைப் புக்கான செய்தித் தொடர்பு நிர்வாகி அனிலா குல்சார் வேதனையுடன் தெரிவித்து இருந்தது குறிப் பிடத்தக்கது.
அந்நாட்டில் பிரதமர் இம்ரான் கான், இந்து சிறுமிகளின் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் ஆகியவை தடுக்கப்படும் என உறுதியளித்த நிலை யிலும் இதுபோன்ற குற் றங்கள் நடந்து வரு கின்றன.
இது ஒரு புறமிருக்க, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையில் அந் நாட்டின் பஞ்சாப் மாகா ணத்தில் மட்டுமே 36 மாவட்டங்களில் 40 ஆயி ரத்து 585 பெண்கள் கடத் தப்பட்டு உள்ளனர் என பஞ்சாப் மாகாண காவல் துறையினர் வெளியிட் டுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சித் தகவலை தெரி விக்கிறது.
இவர்களில் கடந்த 4 ஆண்டுகளில், 3,571 சிறுமி கள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டு, அவர் களை இன்னும் கண்டறிய முடியவில்லை. அவர்க ளின் கதி என்னவாயிற்று என தெரியவில்லை. காவல் துறையினரின் ஆவணப் பதிவில், இவர்கள் மீட்கப் படவில்லை என தெரிவிக் கப்பட்டு உள்ளது.
காவல்துறையினர் மற்றும் கடத்தப்பட்டவர் களின் பெற்றோருக்கு, கடத்தப்பட்ட பெண்கள் 4 ஆண்டுகளாக எங்குள் ளனர் என்ற விவரம் கூட தெரிய வரவில்லை என்று டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த புள்ளி விவரத் தின்படி, 20,17,-136 பேர், 20,18,-234 பேர், 20,19,-344 பேர், 2020-462 பேர் கடத் தப்பட்டு உள்ளனர்.
இதில் அதிர்ச்சி தரும் வகையில், கரோனா பாதிப்பு, ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 2021ஆம் ஆண்டில் 2,395 சிறுமிகள் மற்றும் பெண் கள் கடத்தப்பட்டு உள்ள னர்.
கடத்தலுக்கு இலக்கா னவர்களில் பலர் லாகூரை சேர்ந்தவர்களாக உள்ள னர் என்றும் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment