உக்ரைன் தலைநகர் கீவ்-வை பாதுகாக்க ஆயுதங்களுடன் வலம் வரும் உக்ரைன் மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

உக்ரைன் தலைநகர் கீவ்-வை பாதுகாக்க ஆயுதங்களுடன் வலம் வரும் உக்ரைன் மக்கள்

கீவ், பிப். 27-  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைக ளில் இருந்து ரஷ்யப்படை கள் தாக்க தொடங்கின. 

தொடர்ந்து போர் நீடிக்கிறது. இரு தரப்பி லும், போரை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வருகின் றன.  வீரர்களின் உயிரி ழப்பு பற்றியும் தகவல் வெளிவருகின்றன. 

ரஷ்யப் படைகள் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன.  அந்த நகரின் பல பகுதி களில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு வரு கின்றன. இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்-வை பாதுகாக்க உக்ரைன் மக்கள்  ஆயுதங்களுடன் வலம்வருகின்றனர்.

உக்ரைனின் ஆண்க ளும், பெண்களும் குழுக் களாக ஆயுதங்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கீவ் நகரில் வலம் வந்த ரஷ்ய ராணுவ வாகனங் கள் மீது பாட்டில் குண்டு களை அந்நாட்டு மக்கள் வீசியெறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment