ருமேனியா, பிப். 27- உக்ரைனில் உள்ள பல இந்திய மாண வர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உக்ரை னில் ரஷ்ய படைகள் தொடர்ந்து போரில் ஈடு பட்டு அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் நிலையில், அங் குள்ள இந்திய மாணவர் கள் ஊர்திரும்ப முடியா மல் சிக்கித் தவித்து வரு கின்றனர்.
ஒன்றிய அரசு, அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை உக்ரை னின் அண்டை நாடுக ளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் வசிக்கும் இந் திய மாணவர்கள் அங்கு இருந்து ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரை அடைந்துள்ளனர்.
புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் இந்திய மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசி யப் பொருட்களை விமான நிலைய அதிகா ரிகள் வழங்கினர். இவர் கள் விரைவில் ருமேனி யாவில் இருந்து இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment