ரஷ்யாவின் போருக்கு எதிராக கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின - உக்ரைன் அதிபர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

ரஷ்யாவின் போருக்கு எதிராக கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின - உக்ரைன் அதிபர்

கீவ், பிப். 27- உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்யப் படைகள் தாக்கத் தொடங்கின. உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது.

ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து பேசிய அவர் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். ரஷ்யாவை எதிர்த்து தன்னந் தனியாகப் போராடி வருகிறோம். எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிற நாடுகள் உடனான உக்ரைனின் ராஜாங்க உறவில் இன்று புதிய நாள் தொடங்கி உள்ளது. ரஷ்யாவின் போருக்கு எதிரான கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின.

உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகர ணங்கள் வழங்கப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

பன்னாட்டு விண்வெளி மய்யத்துக்கு ஆபத்து: ரஷ்யா

மாஸ்கோ, பிப். 27- 'அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது' என, ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா மீது, அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆய்வு மய்யத்தின் தலைவர் ரோஸ்கோஸ்மஸ் கூறியதாவது:ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் நான்கு அமெரிக்கர்கள், இரண்டு ரஷ்யர்கள், ஒரு ஜெர்மானியர் என ஏழு விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு தராவிட்டால், பன்னாட்டு விண்வெளி நிலையத்தை காப்பாற்றுவது யார்?

அதை பாதுகாக்க முடியாமல் போனால், 500 டன்னுக்கு மேல் எடை கொண்ட பன்னாட்டு விண்வெளி மய்யம், சீனா அல்லது இந்தியாவின் மீது விழும் பெரும் ஆபத்து உள்ளது.அதனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அவசரப்படாமல், பொறுமையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment