பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் 14ஆம் தேதி விண்ணில் பாய்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 11, 2022

பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் 14ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

சென்னை, பிப்.11 பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளை சுமந்தப்படி

பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் வருகிற 14ஆம் தேதி சிறீஅரிகோட்டாவில் இருந்து விண் ணில் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண் ணில் ஏவி வருகிறது. கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவு வதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

ஆந்திர மாநிலம்  சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 5:59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில், 1,710 கிலோ எடை கொண்ட ..எஸ்.-04 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக் கோள் பொறுத் தப் படுகிறது. இது பூமியிலிருந்து 529 கி.மீ. தூரத்தில் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் சுற்றுவதற்காக வடி வமைக்கப்பட்டு உள்ளது.

விவசாயம், வனம் மற்றும் தோட் டங்கள், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீரியல் மற்றும் வரைப்படங்கள் போன்ற பயன்பாடுகளுக்கு அனைத்து வானிலை நிலைகளிலும் உயர்தர படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ..எஸ்.-04 செயற்கைக் கோள் ஒரு ரேடார் இமேஜிங் செயற்கைகோளாகும்.

இந்த ராக்கெட்டில், இந்திய விண் வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து ஒரு மாணவர் செயற்கைக் கோளான இன்ஸ்பைர்சாட்-1 உள்ள டக்கிய 2 சிறிய செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

கொலராடோ பல்கலைக்கழகம், போல்டர் மற்றும் இஸ்ரோவின் தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள் அய்.என்.எஸ். 2டிடி. இது இந்தியா-பூடான் கூட்டு செயற்கைக் கோளுக்கு (அய்.என்.எஸ்.-2பி) முன்னோடியாகும்.

ராக்கெட்டின் இறுதி கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணிநேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இது வருகிற 13ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 4.29 மணிக்கு தொடங் குகிறது.

இந்த ராக்கெட்டை தொடர்ந்து, இந்தியா மற்றும் பூட்டான் இணைந்து புதிய செயற்கைக் கோளான பூட்டான் சாட்டுடன் இணைந்து மற்றொரு புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான ..எஸ்.-06 அல்லது ஓசோன்சாட்-3-அய் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் பணி தொடரும்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

No comments:

Post a Comment