வாய்க்கு முடக்கம்!
* இந்தியாவுக்கு எதிராக பொய்ச் செய்தி! 60க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்.
>> பொய்ச் செய்தியைத் தவிர வேறு செய்திகளையே சொல்லிப் பழக்கமில்லாத பா.ஜ.க. - சங்பரிவார் வாய்களுக்கு முடக்கம் எப்போது?
அட, இதைப் பாரப்பா!
* கலவரம் இல்லாத ஆட்சி தொடர உ.பி.யில் மீண்டும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்புத் தாருங்கள்1
- பிரதமர் மோடி
>> கலவரத்துக்கே காரணம் பி.ஜே.பி. - சங்பரிவாரம்தானே அப்பா!
நாடகமே உலகம்!
* 'நீட்' தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு நாடகம் ஆடுகிறது.
- எடப்பாடி பழனிசாமி
>> அ.தி.மு.க. ஆடியது கபட நாடகமோ!
வயிற்று வலியா? நெஞ்சு வலியா?
* பா.ஜ.க.வுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு தருவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிற்று வலி.
- பிரதமர் மோடி
>> அப்படியா? வந்தது நெஞ்சு வலி - முஸ்லிம்களுக்கு - முஸ்லிம் பெண்கள் அவ்வளவு முட்டாள்களா?
No comments:
Post a Comment