உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 11, 2022

உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..!

லக்னோ, பிப்.11   உத்தரப்பிரதேசத்தில் பா... தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறதுஇதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, நேற்று (10.2.2022) நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் அமைச்சர்கள் ஆவர்.

தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒன்றியப்படையினரும், மாநில காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் ஒன்றியப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். நேற்று நடந்த  உத்தரப் பிரதேச  சட்டமன்ற  தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில்  60.17  சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளன.

No comments:

Post a Comment