சென்னை, பிப்.11 தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 சதவீ தமாக இருந்த ஒமிக்ரான் தொற்று தற்போது 97 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2021 ஜூலை 7ஆம் தேதி மாதிரிகள் சோதனை செய்ததில் 100 சதவீதம் பேருக்கு டெல்டா வைரஸ் மட்டுமே இருந்தது. அதன்பிறகு படிப்படியாக டெல்டா வைரஸ் குறைய தொடங்கிய நிலையில் ஜனவரி 26ஆம் தேதி மாதிரிகள் சோதனை செய்ததில் 3 சதவீதம் பேர் மட்டுமே டெல்டா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள் ளனர், 97 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பர் 1ஆம் தேதி சோதனை செய்ததில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லாத நிலையில் டிசம்பர் 11ஆம் தேதி 13 சதவீதமாக இருந்த ஒமிக்ரான் தொற்று கடந்த 26ஆம் தேதி 97 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் 97 சதவீதம் பேர் ஒமிக்ரான் தொற்றினால் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment