கோவை, பிப்.27 புதிய ஆதார் அட் டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஆதார் அட்டையில்திருத்தங்கள் உள்ளிட்ட சேவைகளை பெற அஞ்சல் நிலையங்களில் சிறப்பு மய்யங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை கோட்ட அஞ்சல் அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
தனி மனிதனின் முக்கிய அடை யாள ஆவணங்களில் ஒன்றாக கருதப்படும், ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசின் பொது இ-சேவை மய்யங்கள், தனியார் சேவை மய்யங்களை பொதுமக்கள் நாடி வருகின்றனர். அங்கு பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், இதனை எளிமைப் படுத்தும் விதமாகவும், ஆதார் சேவை களை பொதுமக்கள் விரைந்து பெறவும் அஞ்சல் நிலையங் களில் ஆதார் சேவைகளைப்பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. புதிதாக ஆதார் அட்டைக்கு விண் ணப்பம் செய்தல் தொடங்கி அனைத்து சேவைகளையும் அஞ்சல் நிலையங்கள் மூலமாகப் பெறலாம்.
அஞ்சல் நிலையங்களில் புதிதாக விண்ணப்பிப்போருக்கு கட்டணம் எதுவும் கிடையாது என்றும், மாற்றங்கள் செய்ய விண்ணப்பிப் போர் ஒவ்வொரு திருத்தத்துக்கும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அஞ்சல் துறையினர் கூறு கின்றனர்.
இதுகுறித்து கோவை கோட்ட அஞ்சல் அலுவலர் கோபாலன் கூறிய தாவது: கோவை கோட்டத் துக்குட்பட்ட 55 அஞ்சல் நிலையங் களில் ஆதார் சேவைகளைப் பொது மக்கள் பெறலாம். குறிப்பாக, கோவை கூட்செட் சாலையில் உள்ளதலைமை அஞ்சலகம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சலகம், ஆர்.எஸ்.புரம் கிழக்கு அஞ்சலகம், அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் அருகேயுள்ள அஞ்சலகம், எஸ்.ஆர்.கே.வி. பள்ளி அஞ்சலகம் ஆகிய இடங்களில் இதற்காக சிறப்பு மய்யங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.
No comments:
Post a Comment