சுந்தரப்பெருமாள் கோயில் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் டேப் சா.சன்னாசி அவர்களின் நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்ச்சி 23-.02-.2022 புதன் கிழமை மாலை 05.00 மணியளவில் சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் படத் தினை திறந்து வைத்தும், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, தஞ்சை மண்டல தி.க மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி முன்னிலை ஏற்றும் குடந்தை மாவட்ட தலைவர் கு. நிம்மதி தலைமை ஏற்றும், குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயமணி குமார், குடந்தை மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி, சுந்தர பெருமாள் கோயில் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராஜ், குடந்தை ஒன்றிய தலைவர் த.ஜில்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவகுமார், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், துணை செய லாளர் குணசேகரன், பட்டீஸ்வரம் நகர தலைவர் அ.இளவழகன், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் அரங்க. வைரமுடி, அ.இராவணன், போட் டோ மகாதேவன், சோலை மாரியப்பன், குடந்தை ஒன்றிய இளைஞரணி செயலாளர் தென்றல் சதீஷ், பாபநாசம் ஒன்றிய இளை ஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டும் நினைவேந்தல் நினை வுரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியினை அவரது குடும் பத்தினர்கள் மகன் சா. செங் குட்டுவன், மகள்கள் மலர்க்கொடி வாசுகி, பெயரன் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்
தனர்.
No comments:
Post a Comment