மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 சென்னை, பிப்.27 தமிழ்நாடு முதலமைச்சர்  மு..ஸ்டாலின்  இன்று (27.2.2022) சென்னை, ஆழ்வார்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.  

தடுப்பூசி திட்டத்தின் கீழ், தமிழ் நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகை யான தடுப்பூசிகளை பயன்படுத்தி தடுக்கப்படக்கூடிய 12 வகையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்தும், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டி லிருந்தும் போலியோ இல்லாத நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்திடும் வகையில், இந்த ஆண்டு 27-வது சுற்று தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று மாநிலம் முழுவதும் நடை பெறுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன் வாடி மய்யங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, மொத்தம் 43,051 மய்யங்களில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இம்மய்யங்களில் 0-5 வயது வரையுள்ள 57.61 இலட்சம் குழந்தைகளுக்கு (6 வயதிற்குட்பட்ட கூடுதலான குழந்தைகள் உட்பட) போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளான இன்று கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி, பயணிக்கும் குழந் தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடி கள், விமான நிலையங்களில் பயண வழி மய்யங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மேலும்,  நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் இப்பணியில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகா தாரப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட் டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப் பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்  .வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை முதன்மைச் செய லாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ் ணன்,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில் குமார்,  பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

No comments:

Post a Comment