புதுடில்லி, பிப்.27 போரால் பாதிக்கப் பட்டு உள்ள உக்ரைனில் சிக்கியிருந்த 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமான மும், 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட மூன்றாவது விமானமும் இன்று காலை 10 மணியளவில் டில்லி வந்து சேர்ந்தது.
உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமே னியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடு களின் தலைநகரான முறையே புகா ரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவதே ஒன்றிய அரசின் திட்டமாகும். இதற்காக ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு சென்ற விமானங்களில் முதல் விமானம் நேற்று (26.2.2022) பிற் பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக் ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா புறப்பட்டது. இந்த விமானம் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது. விமானத்தில் வந்த பயணிகளை ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்றார். மேலும் அங்குள்ள நில வரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் விமானத்தில் வந்திருந்த பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்ப்டடது. மேலும் தடுப்பூசி சான்றிதழ் அல்லது தொற்று பரிசோதனை சான்றிதழ் பெறப்பட்டது. இதற்காக விமான நிலையத்திலேயே தனி இடம் ஒதுக்கி அவர்கள் தங்க வைக்கப் பட்டனர்.
அங்கு அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் மேற் கொள்ளப்பட்டன. இதில் பெரும் பாலும் மாணவ-, மாணவிகளே வந்திருந் தனர்.
இதைப்போல புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு நேற்று மேலும் 2 விமானங்கள் சென்றுள்ளன. அவை உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் இன்று (27.2.2022) டில்லி வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் போரால் பாதிக்கப் பட்டு உள்ள உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்களுடன் இரண் டாவது விமானம் அதிகாலை 3 மணிக்கு டில்லி வந்து சேர்ந்தது.
அதில் பயணம் மேற்கொண்டவர்களை ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் முரளிதரன் ஆகியோர் வர வேற்றனர்.
முன்னதாக உக்ரைனில் இருந்து புகாரெஸ்ட் வழியாக டில்லி விமான நிலையம் வந்தடைந்த இந்தியர்களுடன் ஒன்றிய விமான போக்குவரத்து அமைச் சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துரை யாடினார்.
அப்போது அவர், பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் தொடர்பில் இருக்கிறார், அனைவரும் பாது காப்பாக வீட்டிற்கு அழைத்து வரப்படுவதை உறுதிசெய்ய பாதுகாப்புகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சிந்தியா கூறினார்.
மூன்றாவது விமானமும் வந்த டைந்தது
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப் பட்ட மூன்றாவது விமானம் இன்று காலை 10. மணியளவில் டில்லி வந்து சேர்ந்தது. 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 3-ஆவது விமானம் டில்லியில் தரையிறங்கியது. அதில் பயணம் மேற் கொண்டவர்களை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
இதைபோல உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந் தனர்.
அவர்களுடன் கேரளா மாணவர் களும் வந்தனர். மாணவர்களை பெற் றோர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
No comments:
Post a Comment