தமிழ்நாட்டில் மேலும் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

தமிழ்நாட்டில் மேலும் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு..!

சென்னை, பிப்.27  தமிழ்நாட்டில் நேற்றைய (26.2.2022) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று 63 ஆயிரத்து 263 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் புதிதாக 480 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,002 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில்  1,464 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,03,402 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 7 ஆயிரத்து 164 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment