உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் 1,500 பேரின் முழுமையான தகவல்கள் கிடைத்துள்ளன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் 1,500 பேரின் முழுமையான தகவல்கள் கிடைத்துள்ளன

சென்னை, பிப்.27 உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களில் ஆயி ரத்து 500 தமிழ்நாடு மாணவர்களின் தகவல்கள் முழுமையாக கிடைத்து உள்ளதாக உக்ரைனில் உள்ள தமிழர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான மாநில தொடர்பு அதிகாரி ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்து உள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து உக்ரைனில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற் கான மாநில தொடர்பு அதிகாரி யான அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறியதாவது:-

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்காக சென்னை எழில கத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மய்யத்திற்கு இதுவரை 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட -மெயில்கள் வந் துள்ளன.

இவற்றின் மூலம், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரத்து 500 தமிழ் நாடு மாணவர்களின் முழுமையான தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் உக்ரைனில் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த பல்கலைக் கழகங்களில் படித்து வருகிறார்கள் என்பது போன்ற முழுமையான தகவல்கள் கிடைத்து உள்ளன.

இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றிய வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்களை பல்கலைக்கழகங்களின் உதவியுடன் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர். உக்ரைனில் இருந்து அதிக அளவிலான மக்கள் வெளியேறி வருவதால், அங்கு பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. எனவே, தமிழ்நாடு மாண வர்கள் வழி தவறிவிடாமல் இருப் பதற்காக, அங்கே குழுக்களாக இருக் கவும், பாதுகாப்பாக இருக்கவும் அறி வுறுத்தப்பட்டுள்ளனர்.

 மேலும், பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அங் குள்ள மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அதேபோன்று தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறோம்.

உக்ரைனில் சிக்கி உள்ள தமிழர்களில் 90 சதவீதம் பேர் மாணவர்கள் தான். மாணவர்கள் அல்லாதவர்களும் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர் களை மீட்பதற்கான நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள தமிழர்கள் ருமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற அருகில் உள்ள நாடுகள் மூலமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment