செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 கடவுள் கிருபை!

*          உக்ரைனில் மக்களுக்கு உதவும் இஸ்கான் கிருஷ்ணன் கோயில்.

>>           போர் வராமல் மக்களைக் காப்பாற்றி இருக்கக் கூடாதா?

ஒழுக்கக்கேடு!

*           ஆக்கிரமிப்பு என்ற பெயரால் கோயில்களை இடிக்கக் கூடாதாம்!

- இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

>>           ஆக்கிரமித்துக் கோயில் கட்டுவதுதான்இந்துவின் ஒழுக்கமோ!

*           கல்விக் கட்டணங்களை வரைமுறைப் படுத்தும் நோக்கத்திலேயேநீட்தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டது.

- ‘இந்து தமிழ்திசைஏடு தலையங்கம்

>>           , அப்படியா! தகுதி - திறமைக்காகவேநீட்என்று இதுவரை சொல்லி வந்தது என்னாச்சு?

பிரதமரா - சத்குருவா?

*          மகா சிவராத்திரியை முன்னிட்டு சத்குருவுக்கு பிரதமர் வாழ்த்து.

>>           குருதானே இதுவரை சீடர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பழக்கம்!

நாசூக்கு...

*          நமது நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசமைப்புச் சட்டம் அந்த உரிமையை வழங்கியுள்ளது.!

- முக்தார் அப்பாஸ் நக்வி

(ஒன்றிய அமைச்சர், பா...)

>>           பிரதமருக்கு நாசூக்காக சொல்கிறாரோ!

யாரை ஏமாற்றிட?

*           இந்தியாவில் இருக்கும் தமிழ் உலகின் பழைமை யான மொழி

- பிரதமர் மோடி

>>           இதனை சங்கராச்சாரியார்களிடம் சொல்லட்டும்!

சோப்ளாங்கி

* தமிழக மீனவர்கள் 8 பேர் - இலங்கைக் கடற் படையால் சிறைப்பிடிப்பு

>>           இதனால் அறிவிப்பது என்னவெனில் இந்தியா உலக வல்லரசாக ஆகப்போகிறது.. ஆகப்போகிறது...

குலமாதாவுக்குச் சிறையா?

*          சென்னையில் சுற்றித் திரிந்த 585 மாடுகள் பிடிபட்டன.

>>           இதே நிலை .பி.யில் நடந்தால்கோ மாதாஎப்படியெல்லாம் மாலை மரியாதையுடன் நடத்தப் பட்டு இருப்பாள்!

No comments:

Post a Comment