அரியானா பாஜக முதலமைச்சருக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

அரியானா பாஜக முதலமைச்சருக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்

 அரியானா, பிப்.28- ஒன்றிய அரசின் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். 2018-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அரியானா முதலமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வு அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 81 நாட்களாக போராடி வருகின்றனர்.

மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு வாக்குறுதிகளை நிறை வேற்றாமல்  பொய்ப் பிரச்சாரம், ஆட்குறைப்பு, தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது என ஐனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை மேற் கொள்கிறது.  அடக்குமுறைக்கு மத்தி யிலும் அங்கன்வாடி பணி யாளர்கள் தங்கள் போராட்ட த்தை துணிச்சலுடன் தொடர்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளவர்கள் அரியானா அரசு கடுமையான எஸ்மா சட்டத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிற் சங்கங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரியானா அரசு அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், முதலமைச்சரின் தொகுதியான கர்னாலில் பிப்ரவரி 14-ஆம் தேதி போராடி வருகின்றனர். உச்சபட்சமாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அருகிலும் இரவில் தங்கி போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

No comments:

Post a Comment